Entertainment
தயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸ்
இயக்குனரும் நடிகருமான லாரன்ஸ் காஞ்சனா, முனி சீரிஸை விட்டு கொஞ்சம் வித்தியாசமாக ருத்ரன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
காஞ்சனா முதல் பாகத்துக்கு பிறகு சரத்குமார் மீண்டும் இப்படத்தில் லாரன்சுடன் இணைகிறார்.
இப்படத்தை தயாரித்து வருவது ஃபைவ் ஸ்டார் ஆடியோ நிறுவனம் நடத்தி வந்த கதிரேசன் என்பவராவார்.
இவரின் பிறந்த நாள் இன்று பட செட்டில் கொண்டாடப்பட்டது. இயக்குனர் லாரன்ஸுடன் சேர்ந்து தயாரிப்பாளர் கேக் வெட்டினார்.
