10,11,12 வகுப்பு வினாத்தாள் லீக்? – பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி

548
students

காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் ஏற்கனவே லீக் ஆனதாக வெளியான செய்தி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 23ம் தேதி முதல் விடுமுறை துவங்கவுள்ளது.

இந்நிலையில், 10,11.12ம் வகுப்பிற்கான வினாத்தாள்கள் ஷேர் சாட் எனும் மொபைல் செயலியில் லீக் ஆகி விட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. நேற்று 11ம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் இரு நாட்களுக்கு முன்பே ஷேர் சாட் செயலியில் வெளியாகிவிட்டது எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  அனல் பறக்கும் ஆக்‌ஷன் திரில்லர்... தெறிக்க விடும் சிபிராஜ்.. ரங்கா டீசர் வீடியோ