புரவி புயலானது நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலையை கடந்தது. தற்போது அந்த புயல் தற்போது இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 120 கிமீ தூரத்தில் முகாம் இட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு 320 கிமீ தூரத்தில் இந்த புயல் மையம் கொண்டுள்ளதால் தென் தமிழகம் எங்கும் கடும் மழை பொழிந்து வருகிறது.
இந்த புயல் மதியம் பாம்பனை நெருங்கும்போது பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவோ நாளையோ பாம்பன் கன்னியாகுமரி நடுவே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.