புரவி புயல் அப்டேட்

84

கடந்த வாரம் சென்னையை அச்சுறுத்தியது புயல் இதனால் நிறைய இடங்கள் சேதமாகின. மரங்கள் விழுந்தன. தொடர் மழையால் சென்னையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.

அதை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த முறை தென்மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் கொடுக்கும் விதமாக புரவி புயல் உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு கடும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரவி புயல் இலங்கை அருகே 12 நேரத்தில் கரையை கடக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயலால் கடும் மழையை தென்மாவட்டங்கள் சந்திக்க இருக்கிறது.

புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகருகிறது. குமரி, நெல்லை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுபெற்று இலங்கையில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  இந்த நிபந்தனைகள் ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது! மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு!!
Previous articleவெளியானது ரஞ்சித் ஆர்யா படத்தின் பர்ஸ்ட் லுக்
Next articleகவசமில்லாமல் காட்சி தந்த ஆதிபுரீஸ்வரரை காண அலைமோதிய மக்கள் கூட்டம்