செக்ஸ் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள பப்பி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
தற்போது ஏராளமான அடல்ட் காமெடி திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஹரஹரமஹா தேவிக்கி வரிசையில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பப்பி’. எப்போதும் காம உணர்வுடன் ஆபாச படங்கள் பார்த்துக் கொண்டு திரியும் இளைஞனின் வாழ்க்கையை கருவாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் அருண், யோகிபாபு, சம்யுக்தா ஹெட்ஜ், தரண் குமார், கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.