Entertainment
பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி மரணம்
பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி. இவர் தங்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தங்க நகைகள் அதிகம் அணிந்து காணப்படுவார் அதுதான் இவரின் அடையாளம்.
ஏராளமான தேன் சொட்டும் பாடல்களை இவர் ஹிந்தியில் கொடுத்துள்ளார். காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்த பப்பிலஹரி தமிழில் நாகேஷ் தயாரிப்பில் ஆனந்த் பாபு நடித்த பாடும் வானம்பாடி படத்தில் இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகுக்கும் வந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக பப்பி லஹிரி ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கட்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. நள்ளிரவுக்கு சற்று முன்பு மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
