புனித் ராஜ்குமார் ஜோடியாக பிரியா ஆனந்த்

15

தமிழில் எதிர்நீச்சல், வை ராஜா வை, அரிமா நம்பி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா ஆனந்த்.சில நாட்களாக அதிக தமிழ்ப்பட வாய்ப்புகள் இன்றி இவர் உள்ளார்.

சிவா நடிப்பில் சுமோ மற்றும் தமிழில் ஆர்டிஎக்ஸ் படம் மட்டுமே தற்போது நடித்து வருகிறார்.

கன்னடத்தில் சூப்பர்ஸ்டாராக விளங்கிய ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக இவர் தற்போது நடித்து வருகிறார்.

ஜேம்ஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் இவர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பகதூர் சேத்தன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

பாருங்க:  ரசிகர்களை மெர்சல் பண்ண வேதாவுடன் கலக்க வருகின்ற மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்