Published
10 months agoon
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சூரி. அசல் மதுரைக்காரனாய் செய்த புரோட்டா காமெடி மூலம் உலகப்புகழ்பெற்ற நடிகரானார் இவர். சொந்த ஊர் மதுரையை மறக்காத இவர் மதுரையில் ஹோட்டல்களை நிறுவியுள்ளார்.
அம்மன் உணவகம் என்ற இரண்டு ஹோட்டல்கள் இவருக்கு மதுரையில் உண்டு. இப்படி சொந்த ஊரை விட்டுக்கொடுக்காமல் மதுரையை சுற்றியே இன்னும் தன் பயணத்தை வைத்துள்ளார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் மதுரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக சொந்த ஊர் பகுதிகளில் சூரி சுற்றி திரிகிறார். அவரது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள ராஜாக்கூர்.
இந்த ஊரில் சூரி தனது சகோதரர் மற்றும் குழந்தைகளுடன் கிராமத்து பம்ப் செட்டில் ஆட்டம் போட்டுள்ளார் அதை புகைப்படமாக அவர் வெளியிட்டுள்ளார்.
இனிய சகோதரர் தின நல்வாழ்த்துகள் 🥰🥰🥰 pic.twitter.com/xAdb8oTwZT
— Actor Soori (@sooriofficial) May 24, 2022