Entertainment
கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்து பல இனிப்பான பாடல்களை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அரசவை கவிஞராக இவர் இருந்தார். எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றால் கடைசிவரை அதிமுகவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார். தற்போது 85 வயதாகும் புலமைப்பித்தன்
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த சசிகலா, புலமைப்பித்தனின் உடல்நிலை குறித்து மருத்துவர் சஞ்சீவ் அகர்வாலிடமும், புலமைப்பித்தனின் பேரன் திலீபனிடமும் விசாரித்தார்.
இந்நிலையில் தற்போது வந்த செய்திகளின்படி சற்று முன் கவிஞர் புலமைப்பித்தன் காலமானதாக செய்திகள் வந்துள்ளது.
