Connect with us

அரசு ஊழியர்கள் சம்பளத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்! மாநில முதல்வரின் பேச்சால் பரபரப்பு!

Corona (Covid-19)

அரசு ஊழியர்கள் சம்பளத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்! மாநில முதல்வரின் பேச்சால் பரபரப்பு!

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கொரோனா பாதிப்பு மேலும் தொடர்ந்தால் அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை இழக்க தயாராக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து விதமான தேவைகளையும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. ஊரடங்கால் தொழில்கள் முடங்கியுள்ளதால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பலமடங்கு குறைந்துள்ளது. மாநில அரசுகள் கேட்ட நிதியையும் இன்னும் மத்திய அரசு வழங்கவொல்ல.

இதனால் நிவாரண நடவடிக்கைக்காக இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் அரசு ஊழியர்களின் ஆறு நாள் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து அந்த தொகையை கொரோனா தடுப்பு நிதியாக பயன்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அங்குள்ள அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற போது அதிரடியாக சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி அதனை அமல்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது

இந்த நிலையில் கேரளாவை அடுத்து தற்போது புதுவையிலும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால் அரசு ஊழியர்கள் தங்களது சம்பளத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது

More in Corona (Covid-19)

To Top