புதுப்பேட்டை வந்து இவ்ளோ வருசமாச்சா

77

தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த படம் புதுப்பேட்டை. யுவன் இசையமைக்க அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய செல்வராகவன் இயக்கி இருந்தார்.

இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் சினேகா நடித்திருந்தனர்.

இப்படம் தனுசின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய படம். தனுஷால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று நினைக்கும் வகையில் ஒல்லியான தேகத்துடன் அதிரடி காட்டியிருப்பார்.

அரசியல் ரீதியாக வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவானது. இப்படம் வெளிவந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதை இயக்குனர் செல்வராகவன் நினைவு கூர்ந்துள்ளார். இப்படம் கடந்த 2006 மார்ச் 26ல் வெளியானது.

பாருங்க:  டாணாக்காரன் படம் குறித்து விக்ரம் பிரபு
Previous article100 மில்லியன் பேர் பார்த்த சிம்புவின் கலக்கல் பாடல்
Next articleஆன்லைன் வகுப்புகள்- முதல்வர் எச்சரிக்கை