Connect with us

புதுக்கோட்டையில் காவல் கண்காணிப்பாளரை மிரட்டிய திமுக நிர்வாகி- எடப்பாடி கண்டனம்

Latest News

புதுக்கோட்டையில் காவல் கண்காணிப்பாளரை மிரட்டிய திமுக நிர்வாகி- எடப்பாடி கண்டனம்

புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனை மிரட்டியதாக திமுக  மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தோன்றும் வீடியோ ஒன்று உலவி வருகிறது.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் திமுகவினர் காவல் துறையினரிடம் நடந்துகொள்ளும் போக்கு வேதனைக்குரியது, புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளரை மிரட்டுகிறார்கள்,அவரும் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறார்,மதுரையில் பெண்காவலர் முன்னிலையில் வேட்டியை அவிழ்த்து அடாவடி செய்கிறார்கள்,

வாய்மையே வெல்லும்’எனும் மந்திரத்தையும்,சிங்கத்தின் உருவத்தையும் தனது முத்திரையாக கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறையின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கண்ணியமிக்க காவல் பணியில் இருப்பவர்களை இப்படித் தரக்குறைவாக பேசுவதை இந்த அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார் எடப்பாடி.

More in Latest News

To Top