5வது மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – பெற்றோர்கள் அதிர்ச்சி

179
Public Exam,

நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 5 மற்றும் 8 வது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை இயக்குனர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  நாடளுமன்ற தேர்தல் 2019 - தேமுதிக கூட்டணியில் குழப்பம்!