துவங்கியது பஞ்சாயத்து… பிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு.. கோவையில் போராட்டம்

211

பிகில் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் துவங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும், மீன் விற்பனை செய்யும் நபராகவும் இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளதால் இப்படத்திற்கு விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

bigil

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் வெளியான பிகில் பட போஸ்டருக்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. செருப்பு கால் அணிந்து மாமிசம் வெட்டும் கட்டையில் விஜய் கால் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட மாமிச இறைச்சி உரிமையாளர்கள் சார்பில் பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தப்படது. கோவை கலெக்டரிடமும் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக பேசிய விஜய் அதிமுக அரசுக்கு எதிராக சில கருத்துகளை கூறியிருந்தார். எனவே, அதன் பின்னணியில் இந்த எதிர்ப்பு எழுந்திருக்க வாய்ப்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பாருங்க:  மிஷ்கினின் பிசாசு 2 பட பூஜை தொடக்கம்