சீனாவில் உருவாகிய கொரொனா உலகெங்கும் பரவி, தன் பலப்பரிச்சையை சற்றும் ஒய்வுன்றி விளையாடி வருகின்றது. கொரொனாவிற்கான மருந்துகள் மற்றும் தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் இரவுப்பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
இதனையடுத்து உலகளில் பல்வேறு நாடுகளில் கொரொனா பரவாமல் தடுக்க ஊரடங்கை பிறப்பித்தனர். இந்த ஊரடங்கால் பல்வேறு நாடுகளுமே பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டுள்ளது. ஆனாலும் அரசாங்கத்திற்கு, நோய் தொற்று பரவாமல் தடுக்க இந்த ஊரடங்கை விட்டால் வேறு வழியுமில்லை. ஆகவே இதை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கமும் பொருளாதார சிக்கல்கள் நேரிட்டாலும் பரவாயில்லை, மக்களின் நலனே பிரதானம் என்று 4ம் கட்ட ஊரடங்கையும் பிறப்பித்துள்ளது.
ஆனால் ஏற்கெனவே பிறப்பித்த 3கட்ட ஊரடங்கை காட்டிலும், 4ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு, மாநில அரசுகள் விரும்பினால் ஊரடங்கில் தளர்வுகளை தொடங்கலாம் என்று கூறியிருந்த நிலையில், தமிழக அரசாங்கம் ஒரு சில தளர்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனப்போதிலும், ஊரடங்கால் தமிழக அரசாங்கத்திற்கு பல துறைகள் முலம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு அதிரடியாக சிக்கன நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி,
>தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாகக் தடை விதிப்பு!
>விளம்பரச் செலவகளை 25% குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்.
>அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில் 20% குறைக்க உத்தரவு
>அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது – அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது
>சால்வைகள், பூங்கொத்துகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்
>மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவதை 50% குறைக்கப்பட வேண்டும்
அதே சமயத்தில், கருணை அடிப்படையிலான பணிகளை தொடர்ந்து நிரப்பலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் அரசு பணியில் அலுவலர் பணிகள் மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.