வயது வித்தியாசம் எங்களுக்கு தடையல்ல- கணவர் பற்றி பிரியங்கா சோப்ரா

41

விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் உலக அழகி பட்டம் பெற்றவர். தமிழன் படத்திற்கு பிறகு பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

பிறகு அமெரிக்காவில் வந்த ஹாலிவுட் சீரியல்களில் நடித்தார். அதன் மூலம் நிக் ஜோனஸ் என்ற தன்னை விட 10 வயது குறைந்த பாப் பாடகருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.

இருவரும் இரண்டு வருடங்கள் முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த நேரத்தில் இருவரின் வயது குறித்தே அதிக விமர்சனங்கள் வந்தன. சமீபத்தில்

தி சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வயது வேறுபாடுகள் எங்கள் உறவில் தடையாக இருந்ததில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

எனக்கு 38, நிக்கிற்கு 28 வயதாகியுள்ளது. 10 வயது வித்யாசம் எங்கள் வாழ்க்கை உறவில் தடையாக இல்லை என்றும், நிக் தண்ணீருக்குள் இருக்கும் மீன், இந்திய கலாச்சாரத்தை பிடித்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பாருங்க:  சிவகார்த்திகேயனின் புதுப்பட பூஜை வீடியோ