பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் திருமண நாள்

பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் திருமண நாள்

உலகப்புகழ்பெற்ற பாடகர் நிக் ஜோனஸ். அமெரிக்காவில் பாப் இசைப்பாடல்களை பாடி வந்த இவருக்கும், இந்தியாவை சேர்ந்த முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவுக்கும் காதல் மலர்ந்தது. அமெரிக்காவில் சீரியல் ஒன்றில் நடிக்க சென்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது அது கல்யாணத்திலும் முடிந்தது.

பிரியங்காவை விட 10 வயது இளையவர் நிக் ஜோனஸ் என ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்தாலும் அது எல்லாம் அவர்களுக்கு இருந்த தெய்வீக காதலில் நீர்த்துப்போனது.

இவர்களது திருமணம் கடந்த 2018ல் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற்றது. இதை குறிப்பிட்டு தனது திருமண நினைவுகளை பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

என்னுடைய பலம் நிக் ஜோனஸ் என பிரியங்கா கூறியுள்ளார்.