Entertainment
ப்ரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் என்ன பிரச்சினை
கடந்த 2018ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனசை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். ஹாலிவுட்டில் ஒரு சீரியலில் நடிக்க சென்றபோது நிக் ஜோனசுடன் பிரியங்காவுக்கு காதல் மலர்ந்தது. பிரியங்காவை விட நிக் ஜோனஸ் 10 வயது குறைந்தவர் இருப்பினும் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் அல்லவா அது போல் இருவரும் தீவிரமான காதலால் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் நெருக்கமான ஜோடியாக இருந்த இவர்கள் பல இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இந்த புகைப்படங்கள் எல்லாம் வைரலானது.
இந்த நிலையில் தன் பெயருடன் நிக் ஜோனஸ் பெயரை சேர்த்து வைத்திருந்த பிரியங்கா அந்த பெயரை சமூக வலைதள கணக்குகளில் இருந்து நீக்கியுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் அவர்களுக்குள் எதுவும் பிரச்சினையா என்று பேசி வருகிறார்கள். இது போல் நடிகை சமந்தாவும் தன் கணவரை பிரிவதற்கு முன் தன் கணவர் பெயரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியதால் இதுவும் அப்படியான பிரச்சினையாக இருக்குமோ என பேசி வருகின்றனர்.
