தமிழகத்தில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008ன் படி விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட 15 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், அந்த சுங்கச்சாவடிகள் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், சிலர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விலை உயர்வுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.