Connect with us

சூடான வெங்காய போண்டா செய்வது எப்படி

Entertainment

சூடான வெங்காய போண்டா செய்வது எப்படி

மாலை நேரங்களில் டீ கடைகளில் கம கம என்று எண்ணெய் சட்டியில் பொரிந்து கொண்டிருக்கும் வெங்காய போண்டாவை நாம் பார்க்கும்போது அந்த மணம் நம்மை இழுத்து அந்த டீக்கடையின் முன்னால் நிறுத்தி விடும்.

அந்த வெங்காய போண்டாவின் மணம் நம்மை என்னவோ செய்து அதை நம்ம சாப்பிட வைத்து விடும்.

10 ரூபாய் கொடுத்தால் இரண்டு போண்டா கடையில் வாங்கி விடலாம் இருந்தாலும் அந்த அளவு மணமாய் வெங்காய போண்டா செய்ய முடிகிறதா என பார்த்து நம்ம ஒரு நளபாக சக்கரவர்த்தி என நிரூபிக்க வேண்டாமா வாங்க வெங்காய போண்டா எப்படி செய்றது என பார்க்கலாம்.

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

சோம்பு – 1 ஸ்பூன்

மிளகாய்தூள் – 1 ஸ்பூன்

மைதா மாவு – 4 ஸ்பூன்

அரிசி மாவு – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

 

1.வெங்காயத்தை நன்றாக பெரிதாக சீவிக்கொள்ளவும்

2. பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்

3. கடலை மாவு,அ ரிசி மாவு, நறுக்கிவைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு, மிளகாய்த்தூள், மைதா மாவு, உப்பு ஆகியவற்றை மிக்ஸ் செய்து தேவையான தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்து கொள்ளவும் அதிக தண்ணீர் சேர்த்து உருண்டை பிடிக்க முடியாத அளவு பிசைந்து விடக்கூடாது கவனமாக இருக்க வேண்டும்.

பின்பு எண்ணெய்யை கொதிக்க வைத்து உருண்டையாக உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளை எடுத்து போட்டால் வெங்காய போண்டா ரெடி.

மாலை நேரங்களில் டீயுடன் கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Continue Reading
You may also like...

More in Entertainment

To Top