சுபஸ்ரீயின் மரணம் தற்செயலானது.. எல்லாம் விதி… இப்படி பேசலாமா பிரேமலதா?

214
premalatha

சமீபத்தில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ மரணம் பற்றி விஜயகாந்த் பிரேமலதா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், நேற்று ஆவடியில் நடந்த ஒரு விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ‘சுபஸ்ரீயின் மரணம் தற்செயலான ஒன்று.. யார்தான் பேனர் வைக்கவில்லை. அந்த நேரத்தில் அப்பெண் அங்கு செல்ல வேண்டும்.. ஒரு பேனர் கீழே விழ வேண்டும்.. பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி அவர் இறக்க வேண்டும் என்பது விதி. இதை எதிர்கட்சிகள் பெரிதுபடுத்தி விட்டனர்’ என அவர் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாருங்க:  என் மகளை மூளைச்சலவை செய்துள்ளனர் செளந்தர்யாவின் தந்தை பேட்டி