தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்காது – பிரேமலதா ஆவேசம்

369

தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை எனவே நல்ல திட்டங்கள் எதுவும் மக்களுக்கு கிடைக்காது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக, தேமுதி, பாமக கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. அதிமுகவும் 38 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 

குறிப்பாக தேமுதிக போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷும் தோல்வி அடைந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா ‘நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. ஆனால், தமிழகத்தில் நிலைமை வேறாக இருப்பது ஏன் என புரியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்காது. தற்போது தேமுதிக பெற்றுள்ள வாக்கு வங்கி காரணமாக முரசு சின்னம் முடக்கப்படாது”என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  புகழேந்தி ஆடியோ குறித்து உரிய விசாரணை - டிடிவி தினகரன் பேட்டி