பிரசாந்த் வழங்கிய கொரோனா நிவாரண நிதி

50

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிப்பிரிவுக்கு இது வரை கொரோனா நிவாரண நிதியை பலரும் வாரி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் பிரசாந்தும் அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜனும் இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக கொடுத்தனர்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பொதுமக்களும் தொழிற்துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் சினிமா துறையினர் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தை இயக்குநர் தியாகராஜனும் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து நிதி அளித்த  அவர்கள், ”முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது.அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று முதல்வர் மு.க ஸ்டாலினை பாராட்டியுள்ளனர்.

பாருங்க:  TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு 2019 - TRB வெளியிட்ட அறிவிப்பு 2019
Previous articleமனநோயாளி போல் பேசும் காத்து கருப்பு- அங்கீகாரம் கொடுக்கும் மக்கள்
Next articleஆர்.ஆர்.ஆர் பட அப்டேட்