இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இசையமைப்பதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு இருந்தார்.அந்தக்கால 80ஸ் ஹிட்ஸ் சினிமா பாடல்கள் பல இங்கிருந்து பிறந்தவையே.
பிரசாத் ஸ்டுடியோ நிறுவனர் பிரசாத் இளையராஜாவுக்காக ஸ்பெஷலாக இங்கு அறைகளை அமைத்து கொடுத்துள்ளார்.
நிறுவனர் எல்.வி பிரசாத் மறைவுக்கு பிறகு அவரின் மகன் நிர்வாகத்தை கவனித்து வந்தார் . தற்போது எல்.வி பிரசாத்தின் பேரன் கையில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் உள்ளது. இளையராஜாவுக்கும் தற்போதைய நிர்வாகத்துக்கும் பனிப்போர் நிலவுகிறது
இளையராஜா அந்த ஸ்டுடியோவை காலி செய்ய வேண்டும் ஸ்டுடியோ நிர்வாகத்தினர் நிர்பந்தித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வரும் வேளையில் தான் 40 வருடமாக இசையமைத்த அந்த இடத்துக்கு சென்று தான் தியானம் செய்ய வேண்டும் அதற்கு அனுமதிக்க வேண்டும் என இளையராஜா நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு ஸ்டுடியோ நிர்வாகம் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

