தமிழில் டூயட் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். பாலச்சந்தரின் கல்கி, மதுரை முத்துப்பாண்டியாக நடித்த கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தது மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார், சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
இந்த நிலையில் சில வருடங்களாகவே மத்தியில் ஆளும் பிஜேபி அரசுக்கு எதிராக இவர் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் வகையில் அவர்களது செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதனால் பிஜேபியினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டார். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் கட்சிக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாவதால் அவற்றில் ஒன்றை பிரகாஷ்ராஜுக்கு கொடுக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது. இதற்காக பிரகாஷ்ராஜை அழைத்து சந்திரசேகர் ராவ் பேசியிருப்பதாகவும் தெரிகிறது.