Entertainment
நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்! பிரபுதேவா மனைவி கோபம்!
தன் கணவரைத் தன்னிடம் இருந்து பிரித்துச் சென்ற நயந்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன் என பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இப்போது இருக்கும் நயன்தாரா தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் சிம்புவைக் காதலித்து பிரிந்தார். அந்த சர்ச்சைகள் ஓய்வதற்குள் இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவாவுடன் காதலில் ஈடுபட அது பல மடங்கு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதற்கு முக்கியமானக் காரணம் பிரபுதேவா ஏற்கனவே திருமணமானவர் என்பதுதான்.
இந்நிலையில் திருமணம் செய்துகொள்வதற்காக பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்ய, நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ பிரபுதேவாவை நயன் பிரிந்தார். அதன் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை இப்போது காதலித்து வருகிறார். இந்நிலையில் பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயந்தாரா மேல் உள்ள தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்று அளித்துள்ள பிரபுதேவாவின் மனைவி ரமலத் , ” ”பிரபு தேவா நயன்தாராவை காதலிக்கிறார் என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவர் ஒரு நேர்மையான கணவராக கடந்த பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்தை கவனித்து வந்தார். எங்களுக்கு புதிதாக வீடு கூட வாங்கி கொடுத்தார். ஆனால் எப்போ நயன்தாரா என் கணவரை அபகரித்தாரோ அப்போது அவர் மாறியதை நான் உணர்ந்தேன். அடுத்தவர் கணவனை அபகரித்த நயன்தாராவுக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும். மேலும், நயன்தாராவை நான் எங்கு பார்த்தாலும் அங்கேயே எட்டி உதைப்பேன்” என்று ஆவேசமாக கூறினார்.