இன்று பிரபுதேவாவுக்கு பிறந்த நாள்

16

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபு தேவா.  மெளனராகம் உள்ளிட்ட ஆரம்ப கால படங்களில் இருந்தே பிரபுதேவாவின் சினிமா கேரியர் துவங்கி விட்டது. அந்த படத்தில் வரும் பனி விழும் இரவு பாடலில் சிறு வயது பையனாக குரூப் டான்ஸர்களுடன் இவரும் வருவார்.

பின்பு அக்னி நட்சத்திரம் படத்தில் ராஜா ராஜாதி ராஜனிந்த பாடலில் லேசாக முகம் காட்டி ஆடினார் அப்போது அவருக்கு வயது 16.

பின்பு 90களின் ஆரம்பத்தில் சின்ன ராசாவே சித்தெரும்பு, சூரியன் படபாடலான லாலாக்கு டோல் டப்பி பாடல்களின் மூலம் பிரபலமாகி இந்து, காதலன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார் இந்த காலகட்டங்களில் பிரபுதேவாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட் சினிமாவில் இருந்தது.

ஒரு கட்டத்தில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் படங்களை இவர் இயக்க தொடங்கினார்.விஜய் நடித்த போக்கிரி, வில்லு, விஷால் நடித்த வெடி உள்ளிட்ட படங்களை இவர் இயக்கினார்.

இன்றும் முன்னணி நடிகராக படம் நடித்துக்கொண்டும் இயக்கிக்கொண்டும் இருக்கிறார் .இன்று பிறந்த நாள் காணும் இவரை வாழ்த்துவோம்.

பாருங்க:  பாரதிய ஜனதாவை மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்த சுந்தரவள்ளி
Previous articleசொற்களில் கவனம்- சுல்தான் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்
Next articleகலக்கும் மாதவனின் ராக்கெட்ரி டிரெய்லர்