பிரபாஸ்க்கு பேனர் வைக்கும் ரஜினி ரசிகர்கள்

பிரபாஸ்க்கு பேனர் வைக்கும் ரஜினி ரசிகர்கள்

ஆந்திராவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடித்த பாகுபலி உள்ளிட்ட படங்கள் தமிழிலும் வெளிவந்துள்ளன. முன்னணி நடிகரான பிரபாஸ்க்கு ஆந்திராவில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. அவரது பட ரிலீசுக்கு ரசிகர்கள் பேனர் வைத்து அசத்தி விடுவார்கள் பிரபாஸ் ரசிகர்கள் பிரபாஸுக்கு பேனர் வைப்பதில் ஆச்சரியம் இல்லை ஆனால் வேறு ஒரு நடிகரின் ரசிகர்கள் பிரபாஸுக்கு பேனர் வைத்துள்ளார்கள்.

நேற்று பிரபாஸ் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பலவிதத்திலும் வெளிப்படுத்தினர். பிரபாஸின் பிறந்த நாளுக்கு ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளில் ரஜினி ரசிகர்களும் பேனர் வைத்து அசத்தியுள்ளனர் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.