Connect with us

Latest News

பிரபாகரனை கொன்ற ராஜபக்சே பதவி பறிபோனது மகிழ்ச்சி- விஜயகாந்த்

Published

on

நடிகரும் தேமுதிக கட்சித்தலைவருமான விஜயகாந்த் இலங்கை பிரச்சினை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை பிரச்னை, விலைவாசி உயர்வு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது. ராஜபக்சே சகோரதரர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்தாவின் ஆதாரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் தலைநகர் கொழும்புவில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.
ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை. முன்பெல்லாம் பாவம் செய்தால் அதற்கான தண்டனையை பெற பல ஆண்டுகள் ஆகும். ஆனால் தற்போது பாவத்திற்கான தண்டனையை கண்ணெதிரிலேயே அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும். தப்பு செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அதிகாரம் கையில் இருக்கும்போது மமதையின் காரணமாக மக்களை மதிக்காத யாராக இருந்தாலும் இதுதான் தீர்ப்பு என்பதை இன்றைக்கு இலங்கையில் ராஜபக்சேவுக்கு நடந்திருப்பது பறைசாற்றுகிறது.
இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிகிறது. இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து
கொண்டிருக்கிறது. இன்றைக்குதான் அந்த இனப்படுகொலைக்கே ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. அநீதி இழைத்த இலங்கையில் தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு இன்றைக்கு குளிர்ந்த பூமியாக மாறியிருக்கிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு செய்த கொடுமைகளுக்காகவும், அப்பாவி தமிழர்களை கொன்றதற்காகவும் ராஜபக்சே குடும்பத்திற்கு கிடைத்த தண்டனையாக தான் இதை பார்க்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. அதேசமயம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்கள் விரைவில் அதிலிருந்து மீளவேண்டும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கான ஒரே சான்று இந்த சரித்திரம். எனவே இன்றைக்கு தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவருடன் இறந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். எனவே, அந்த மக்களை இன்று நாம் நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

பாருங்க:  தெளிவாக காய் நகர்த்தும் தமிழக பாஜக-முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பு
Latest News6 hours ago

இராமநாதபுரம் சேதுபதி மன்னர் காலமானார்

Latest News7 hours ago

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டி.ராஜேந்தர்- இன்று அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார்

Latest News7 hours ago

கும்பகோணம் பகுதியில் கோவில் கோவிலாக சுற்றிய நயன்

Entertainment7 hours ago

மாரிதாஸ், சவுக்கு சங்கர் மீதான வழக்கு- அதிகார மமதையின் உச்சம்- அண்ணாமலை

Latest News8 hours ago

நடராஜர் இழிவு பேச்சு- சிதம்பரத்தில் சிவனடியார்கள் போராட்டம்

Entertainment1 day ago

விஷால் நடித்து வரும் பான் இந்தியா படம் லத்தி- ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News1 day ago

திருவாரூர் கமலாலய குளத்தில் ஆட்டோ ஓட்டுநர் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்

Entertainment1 day ago

ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்ற கிம் ஜாங் உன்

Entertainment1 day ago

பெரும் வெற்றி பெற்ற ஐயப்ப பக்தி படமான நம்பினார் கெடுவதில்லை படத்துக்கு 36 வயது

Entertainment1 day ago

மது விருந்து நிகழ்ச்சியில் நடனமாடியவர் மயங்கி விழுந்து பலி

Entertainment5 days ago

கோவையில் இசைஞானியின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

Latest News6 days ago

பேரறிவாளன் விடுதலை- திருமணம் பற்றி முடிவெடுப்பதாக பேட்டி

Entertainment3 days ago

மாட்டுக்கறி தப்புனா எல்லா கறியும் சாப்பிடக்கூடாது- நிகிலா விமல்

Entertainment5 days ago

டான் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி

Latest News4 days ago

வராஹி மாலை ஜெபித்தால் தீயவை அனைத்தும் விலகும்

Latest News4 days ago

அந்தரங்கத்தை பேசினால் புண்ணியங்கள் குறையுமா?

Latest News2 days ago

பிரபல தமிழ் பின்னணி பாடகி மரணம்

Entertainment6 days ago

நீண்ட போராட்டத்துக்கு பின் பேரறிவாளன் விடுதலை

Entertainment4 days ago

இன்று மறைந்த நடிகர் முரளியின் பிறந்த நாள் – மகன் அதர்வா வாழ்த்து

Latest News4 days ago

பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல- அண்ணாமலை