மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக்தான் விசித்திரன் திரைப்படம். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் தமிழில் ஆர்.கே சுரேஷ் நடிக்க தயாராகி வருகிறது.
ஆர்.கே சுரேஷ் தாரை தப்பட்டை, மருது படங்களில் வில்லனாகவும் தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்
இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்க இப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் ஜான் மகேந்திரன் இப்படத்திற்கு வசனம் எழுத மலையாளத்தில் இயக்கிய அதே பத்மகுமாரே மீண்டும் தமிழில் இயக்குகிறார்.
இப்படத்தில் விசித்திரனாக நடிக்கும் ஆர்.கே சுரேஷ்க்கு ஜோடியாக பூர்ணா குடும்பத்தலைவியாக நடித்துள்ளார்.
சமீபத்தில்தான் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.