பூனம் பாண்டேவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாலிவுட் கவர்ச்சி மாடலிங் ஆக இருந்தார். ஆடையில்லாமல் ஓடப்போகிறேன் என சவால் எல்லாம் ஆரம்பத்தில் விடுத்தார்.
தினம் ஒரு சர்ச்சையில் செய்தித்தாள்களில் அடிபட்டு பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். கவர்ச்சியில் எல்லை மீறி செல்லும் இவர் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் சாம் பாம்வே என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
அவருடன் மிக நெருக்கமாக இருக்கும் நிர்வாண டைப் படங்களை எல்லாம் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
கடந்த செப்டம்பர் 10ம் தேதி இவருக்கும் இவரது காதலர் சாம் பாம்வேக்கும் திருமணம் நடந்தது.
கோவாவுக்கு கணவருடன் ஹனிமூன் பூனம் பாண்டே கணவர் மீது தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் புகார் கூறியுள்ளார். கோவா போலீசில் இது தொடர்பாக பூனம் பாண்டே புகார் அளித்துள்ளார்.