தமிழில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே, இந்த படம் அவருக்கு சரிவர கை கொடுக்கவில்லை அவர் பெயரும் தெரியவில்லை. இருப்பினும் பூஜா ஹெக்டே தெலுங்கில் நடித்த படங்கள் கை கொடுத்ததால் அவர் பிரபலமடைந்தார்.
தற்போது தளபதி விஜய்யின் 65வது படத்தில் நடித்து கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டே 15 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கொரோவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதில், PULSE OXI மீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து ஒரு எளிய செயல்முறை விளக்கமும் கொடுத்துள்ளார்.
பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதால் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

