கொரோனா வைரஸ் காரணமாக சினிமா உலகமே முடங்கியுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்புச் செலவைக் குறைக்க உள்ளது லைகா.
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் செயல்வடிவம் பெற்றது. இதையடுத்து தாய்லாந்தில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து வந்தார் மணிரத்னம். அதில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளைப் படமாக்கினார் மணிரத்னம். தாய்லந்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்ததால் படத்தில் வேலைகள் தொடரமுடியவைல்லை. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நிலவும் பொருளாதார நிலையை காரணம் காட்டி படத்தின் பட்ஜெட்டை குறைக்க தயாரிப்பு நிறுவனம் லைகா முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது உறுதிசெய்யப்படாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.