கேப்டனின் பொங்கல் வாழ்த்துக்கள்

71

நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளில் விவசாயிகளின் வாழ்வில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி மலர வேண்டும், மக்கள் மனதில் இருள்நீங்கி இன்பம் பொங்கிட வேண்டும்!
உழைப்பரே உயர்ந்தவர் என்ற அடிப்படையில் உழைப்புக்கு மரியாதை தரும் நாள்தான் பொங்கல் திருநாள். உழவர் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், நெற்றி வியர்வை நிலத்தில் விழ, விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு உழைத்த பலனை அனுபவிக்கும் திருநாளாகும். அறுவடையான நெல்லை கொண்டு, முதல் பொங்கல் வைக்கும் மகிழ்ச்சிகரமான நாளாகவும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதாேறும் தேமுதிக சார்பில் பக்ரீத் நாள் அன்று இஸ்லாமியர்களுக்கு குர்பானி வழங்கியும், கிறிஸ்துமஸ் அன்று கேக்கும், பிரியாணியும் வழங்கி கொண்டாடி வருகிறோம். இதுபோல பொங்கல் திருநாளன்றும் தேமுதிக சார்பில் ஏழை – எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இயன்றதைச் செய்வோம், இல்லாதவற்கே என்ற நமது கொள்கையின் அடிப்படையில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை – எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற பொங்கல் பொருட்களை வழங்கி, இந்த திருநாளை உற்சாக கொண்டாட வேண்டும்.
மேலும், இந்த இனிய பொங்கல் திருநாளில் விவசாயிகளின் வாழ்வில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி மலர வேண்டும், மக்கள் மனதில் இருள்நீங்கி இன்பம் பொங்கிட வேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
பாருங்க:  அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா மரணம்