Latest News
பொங்கல் பரிசு ஊழல்- அமைச்சர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் யூ டியூபர் மாரிதாஸ்
மதுரையை சேர்ந்தவர் யூ டியூபர் மாரிதாஸ் இவர் திமுகவினர் செய்யும் ஊழல்கள் குறித்து அடிக்கடி யூ டியூபில் வீடியோ வெளியிடுபவர். மாலை 7 மணி ஆகிவிட்டாலே ஒரு ஒயிட் போர்டும் கையுமாக இவர் வந்து திமுகவினரை பற்றி அவர்களின் ஊழல் பற்றி பேசுவார்.
சமீபத்தில் சில வழக்குகள் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட மாரிதாஸ் அவ்வழக்குகளில் இருந்து குற்றமற்றவர் என நிரூபித்து வெளியில் வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட தொகுப்புகள் அனைத்தும் சரியான முறையில் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்த நிலையில் யூ டியூபர் மாரிதாஸ் தெரிவித்துள்ள கருத்தாவது,
பொங்கல் பரிசுத் தொகுப்பு: “மிளகு’னு சொல்லிட்டு இலவம்பஞ்சு கொட்டைய தர்றாங்க…” – கொதிக்கும் மக்கள்! அமைச்சர் சக்கரபாணி, அமைச்சர் பெரியசாமி இருவரையும் மத்திய அரசு கைது செய்து விசாரனையை தொடங்க வேண்டும். ஊழல் என்பதை தாண்டி உணவு கலப்படம் வரை ஒரு பெரும் கொள்ளை நடந்துள்ளது.
என இவர் கூறியுள்ளார்.
