சிம்பு நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் மாநாடு. மாநாடு என்ற பெயர் வைத்த நேரமோ என்னவோ தெரியவில்லை தொடர்ந்து அந்த படத்திற்கு தடங்கலுக்கு மேல் தடங்கலாக வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. கென்னடி கிளப் படத்துக்கு பிறகு சுசீந்திரன் தமிழில் படம் இயக்கவில்லை. சில நாட்களுக்கு முன் அவருக்கு ஒரு சிறு விபத்தும் ஏற்பட்டது இதை எல்லாம் தாண்டி தற்போது சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி வருகிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே பார்ப்பதற்கு அதிரடியாக உள்ளது ஈஸ்வரன் என்ற டைட்டிலுக்கு ஏற்றது போல் கழுத்தில் பாம்புடன் சிம்பு ஒரு கரும்புக்காட்டுக்குள் காட்சியளிக்கிறார்.
இப்படம் சிம்பு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.