cinema news
ஆர்யாவிடம் போலீஸ் விசாரணை
இலங்கை சேர்ந்த கிரிஜா என்ற பெண் ஜெர்மனி நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். அந்த நாட்டில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் அந்த பெண் சமீபத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பிய மனுவில் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார்.
மேலும் கொரோனா காலத்தில் 70 லட்சம் வரை வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் நடிகர் ஆர்யாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விரைவில் புகார் அனுப்பிய கிரிஜா என்ற பெண்ணிடமும் விசாரணை நடக்க உள்ளதாக தெரிவித்தனர்.