மக்கள் நீதி மய்யக் கட்சி கமல்

Pollachi sex abuse case – ட்விட்டரில் கமல் உருக்கமான பேச்சு!

பொள்ளாச்சி வழக்கை தொடர்ந்து பலரும், தமிழக அரசை மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி வருகின்றர்.அதே போல், கமல்ஹாசன் தமிழக அரசையும், காவல் துறையையும் நோக்கி கேள்விகளை எழுப்பி வந்துள்ளார்.

அதில், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அழுகை வீடியோவை கேட்ட பிறகு மனசு பதறுகிறது எனவும், நிர்பயாவுக்கு நடந்த கொடுமையைக் கேட்டு ஊர் உலகமே திரண்டப்போ, தமிழக முதல்வர் ஒரு அறிக்கை விட்டார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடூரக் குற்றங்களாகக் கருதப்பட்டு, உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று சொல்வதில் உள்ள மும்முரம், குற்றம் செய்யப்பட்டோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என தெரிவிப்பதில் ஏன் மும்முரம் காட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதையும் எதிர்த்து கண்டனம் தெரிவித்தார்.மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவராக கேட்கவில்லை, இரண்டு பெண்களின் தந்தை என்ற முறையில் கேட்பதாக கூறினார்.

https://twitter.com/i/status/1106225236821708800