Latest News
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக 7 போலீசார் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை பார்க்க அவர்களின் உறவினர்கள் அவர்களின் உறவினர்களுக்கு போலீசார் அனுமதி அளித்து நடுரோட்டில் வண்டியை திறந்து அவர்களை பார்க்க அனுமதித்ததாக ச குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு,சபரிராஜன், மணிவண்ணன்,வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சேலம் சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேனில் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
எஸ்.எஸ்.ஐ சுப்ரமணியம் உட்பட 7 போலீசார் இவர்களுடன் சென்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள பீளமேடு கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு கைதிகளின் உறவினர்களின் வற்புறுத்தலின்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கைதிகளை பார்க்க வேண்டும் என உறவினர்கள் கூறியதால் வேனை திறந்து பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது குறித்து விசாரணை நடத்திய சேலம் மாநகர கமிஷனர் எஸ்.எஸ்.ஐ சுப்ரமணியம் உட்பட 7 போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.