தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

19

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.

இந்தியா முழுவதும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை முதல் மாலை வரை தொடங்க இருக்கிறது.

தமிழகத்தில்  ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என்று மொத்தம் 43,051 மையங்களில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.

குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் போன்ற முக்கிய இடங்களில், நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  கொரோனா பரவல்: அதிர்ச்சியளிக்கும் மகாராஷ்டிரா! இரண்டாம் இடத்தில் தமிழகம் !