Connect with us

Latest News

காவல் நிலையத்துக்கே சென்று போலீசை மிரட்டிய நபர்கள்

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த பெரியகரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், புருஷோத்தமன், பாலாஜி ஆகியோர் நேரடியாக காவல் நிலையம் சென்று அங்கு போலீசாரை குடிபோதையில் மிரட்டினர்.

இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது

பாருங்க:  2 மனைவிகள் இருக்கும் போது 3வது திருமணம் - வாலிபருக்கு தேர்ந்த கதி

Entertainment

தீபாவளிக்கு மாநாடு கிடையாது

சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 4 தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் தீபாவளிக்கு இப்படம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு அண்ணாத்தே உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் இப்படம் வரும் நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ.

பாருங்க:  2 மனைவிகள் இருக்கும் போது 3வது திருமணம் - வாலிபருக்கு தேர்ந்த கதி
Continue Reading

Latest News

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி மறைவு- வருத்தத்தில் பிரபலங்கள்

கடந்த 2002ம் ஆண்டு சன் டிவியில் வெளியான மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் திருமுருகனின் மனைவியாக நடித்தவர் உமா மகேஸ்வரி.

இவர் வெற்றிக்கொடி கட்டு அல்லி, அர்ஜீனா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கால்நடை மருத்துவர் ஒருவரை மணம்புரிந்துள்ள இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்ததில் இவர் இறந்தது தெரிய வந்தது.

உடனே அவரது உடல் சென்னை காட்டுப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

உமா மகேஸ்வரியின் மறைவு சின்னத்திரை நடிகர் நடிகைகள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  பிரபல பாடகரின் தந்தை மறைவு
Continue Reading

Latest News

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் அதிரடி ஆட்டக்காரனாக விளங்கியவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங் இவரும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். யுவராஜ் சிங் புற்று நோய் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து மீண்டு வந்தார்.

பின்னர் ஒரு சில போட்டிகளில் விளையாடி வந்தார். சில வருடங்களாக இவர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் இவர் ஒரு வருடம் முன் சாதி ரீதியாக மேற்கொண்ட பதிவுகளால் சிலர் கோபமடைந்து இவர் மீது வழக்கு பதிந்தனர்.

ஒரு வருடத்துக்கு பின் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் சிங் சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பாருங்க:  தமிழகத்தில் மேலும் 6 போலிஸாருக்குக் கொரோனா உறுதி! அதிர்ச்சியில் கோவை!
Continue Reading

Trending