Entertainment
போலீஸ் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன் – பயில்வானை வெளுத்தெடுத்த சுசித்ரா
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் வில்லத்தன நடிகராகவும் பல வருடங்களாக நடித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் அந்த காலத்தில் இருந்து பத்திரிக்கையாளராக இருந்து வருபவர்.
அந்தக்காலத்தில் பத்திரிக்கைகளில் வந்த கிசு கிசு அடிப்படையில் உள்ள செய்திகளை வைத்து தற்போது யூ டியூப் சேனல்களில் இவர் பல நடிகர் நடிகைகளை அவதூறு பேசி வருவதாக கூறப்படுவதுண்டு.
பல நடிகர் நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டு வைக்காமல் அவர்களின் அந்தரங்கங்களை பேசுகிறேன் என ஆபாசமாக இவர் பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்பட்டுள்ளது.
இது எதையும் ஏற்றுக்கொள்ளாத பயில்வான் தன் மனம் போன போக்கில் யாரை பற்றியும் அவதூறு ஆபாச செய்திகள் சொல்வதை நிறுத்தவில்லை,சமீபத்தில் நடிகை ராதிகாவும் பயில்வானை கண்டித்ததாக சொல்லப்பட்டது.
தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகை கஸ்தூரி ஆகியோரும் பயில்வானை சரமாரியாக கேள்வி கேட்டாலும் அவர் சொல்லும் ஒரே பதில் நான் அப்டிதான் என்பது போலவே இருக்கும்.
இந்த சூழ்நிலையில் நடிகையும் பாடகியுமான சுசித்ரா பற்றி மிக அவதூறான வகையில் கருத்து ஒன்றை கூறியுள்ளார் பயில்வான்.இந்த வீடியோவை பார்த்த சுசித்ரா மொபைல் ஃபோனில் பயில்வானை தொடர்பு கொண்டு அவரை வெளுத்தெடுத்துள்ளார்.
— abiram arunachala (@abiramarunacha2) June 6, 2022
