சுடுகாட்டில் எரியும் பிணங்களை தின்று வந்த நபர் கைது செய்யப்பட்ட விவகாரம் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசியில் எரிக்கப்படும் பிணங்களை அகோரிகள் உண்பது பற்றி நாம் அறிவோம். சிவபானம் எனக் கூறப்படும் கஞ்சாவை அருந்திவிட்டால் தன்னையே சிவனாக பாவித்து அவர்கள் பிணங்களை தின்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஒரு அகோரி இருந்துள்ளார். வாசுதேவநல்லூருக்கு அருகே உள்ள டி.ராமநாதபுத்தில் வசித்து வருபவர் முருகேசன்(45). அவருக்கு மது, கஞ்சா உள்ள பழக்கம் இருந்துள்ளது. எனவே, இவரின் மனைவி இவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே, அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்ம நபர் ஒருவர், எரியும் பிணங்களை வெட்டி திண்ணுவதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த விவகாரம் அந்த கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அங்கு ஒரு மூதாட்டி மரணமடைந்தார். அவரை கிராம மக்கள் சுடுகாட்டில் எரித்து விட்டு சென்றனர். அனைவரும் சென்ற பின், சுடுகாட்டுக்கு கையில் அரிவாளுடன் வந்த குமரேசன் பிணத்தின் ஒரு பகுதியை வெட்டி சாப்பிடத் தொடங்கினார்.
இதைக்கண்ட பொதுமக்கள் அவரைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதிய போலீசார் அவரை சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.