Published
11 months agoon
சமீப காலமாக உள்ளாட்சி அலுவலகங்கள் பலவற்றில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் அகற்றப்படுகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது,
வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு அலுவலகங்களில் இந்திய பிரதமரின் புகைப்படத்தை அகற்றுவது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, கடும் குற்றமும் கூட. இன்று காலை கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படத்தை
குண்டர்கள் சிலர் அகற்றியுள்ளது
வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை கண்டிக்கும் விதத்தில் பிரதமரின் படத்தை மாட்ட வேண்டும் என்று வலியுறுத்திய பாஜகவினரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயக விரோத செயல். உடனடியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள பாஜகவினரை
விடுவிக்க உத்தரவிடுவதோடு,பிரதமரின் படம் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் மீண்டும் இடம் பெற செய்ய உத்தரவிட வேண்டும். தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பிரதமரின் படங்களை அகற்றும் தி மு க வினரின் அராஜக வெறி செயலை முதல்வர்
அவர்கள் கண்டிக்காமல் இருப்பது, தி மு க தலைவர்
என்ற அடிப்படையில் பிரதமரின் படங்கள் இடம் பெறக்கூடாது என்று எண்ணிக்கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகத்தை வலுவடைய செய்கிறது. இந்த விவாகரத்திற்கு விரைவில் முற்று புள்ளி வைப்பாரா திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் என கேட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.