நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 350 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று மாலை 7 மணியளவில் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். மேலும், அவருடன் அமைச்சரவையில் பங்கேற்கும் பல்வேரு எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி காண்போம்.
அமித் ஷா – உள்துறை அமைச்சர்
நிர்மலா சீதாராமன் – நிதி அமைச்சர் (கார்ப்பரேட் விவகாரங்களையும் கவனிப்பார்)
ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை
ஸ்மிருதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை
எஸ்.ஜெயசங்கர் – வெளியுறவுத்துறை
பியூஸ் கோயலுக்கு -ரயில்வே துறை, தொழில் மற்றும் வர்த்தகத்துறை
நிதின் கட்கரி – தரைவழிப் போக்குவரத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை
சதானந்த கவுடா – உரத்துறை
ராம் விலாஸ் பஸ்வான் – உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை
நரேந்திர சிங் தோமர் – விவசாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்
ரவிசங்கர் பிரசாத் – சட்டத்துறை மற்றும் தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை
முக்தர் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலத்துறை
ஹர்சிம்ரத் கவுர் பாதல் – உணவுப் பதப்படுத்துதல் துறை
பிரகாஷ் ஜவடேகர் -தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை (சுற்றுச் சூழல் துறையையும் கவனிப்பார்)
தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியத்துறை
பிரஹலாத் ஜோஷி -நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
தவார் சந்த் கெலாட் – சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
ரமேஷ் பொக்ரியால் – மனித வள மேம்பாட்டுத்துறை
அர்ஜூன் முண்டா -பழங்குடியினர் நலத்துறை
ஹர்சவர்தன் – சுகாதாரத்துறை
மகேந்திரநாத் பாண்டேவுக்கு – திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை
கிரிராஜ் சிங் – கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை
ஜிதேந்திரா சிங் – பிரதமர் அலுவலகங்களுக்கான இணை அமைச்சராக (தனி பொறுப்பு)
கிரண் ரிஜிஜு – தனிப் பொறுப்புடன் கூடிய விளையாட்டுத்துறை இணை அமைச்சர்
பிரஹலாத் சிங் படேல் – தனிப் பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர்
ஆர்.கே.சிங் – தனிப் பொறுப்புடன் கூடிய மின்சாரத்துறை இணை அமைச்சர்
மன்சுக் மாண்டவியா – தனிப்பொறுப்புடன் கூடிய கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சர்
வி.கே.சிங் – தரை வழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர்
வி.முரளிதரன் – வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர்