PM Modi Speech
PM Modi Speech

இந்திய மக்களுக்காக பிரதமர் மோடி சொன்ன 7 விஷயங்கள்! நோட் பண்ணிக்கங்கோ மக்களே!!

இந்தியாவில் கொரொனா பீதியால் நோய்த்தொற்று பரவாமல் இருக்க இந்திய அரசு ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருந்தது.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி இருந்தார். நேற்று வீடியோ மூலம் பேசிய மோடி, நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் கொரொனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், ராணுவ வீரர்கள் போல நாட்டு மக்கள் கட்டுப்பாட்டுடன் கொரொனா ஊரடங்குகை கடைபிடித்து வருவதாகவும், அத்தோடு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே கொண்டாடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியருந்தார். மேலும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஆகவும் உரையாற்றியிருந்தார்.

அத்துடன் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு 7 முக்கியமான விஷயங்களை வேண்டுகோளாக கேட்டுக்கொண்டுள்ளார்

1. உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்துக்கொள்ளுங்கள்
2. யாரையும் வேலையை விட்டு நீக்காதீர்கள்
3. வீட்டில் கூட முகமூடி அணியுங்கள்
4. முதியோர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்
5.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகளை பின்பற்றுங்கள்
6. மே 3 வரை, இப்போது எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள்
7. தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பளியுங்கள்.

இதனை தொடர்ந்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் “பிரதமரின் ஏழு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.