பிரபல தமிழ் பின்னணி பாடகி மரணம்

பிரபல தமிழ் பின்னணி பாடகி மரணம்

சங்கீதா சஜீத் பிரபல பின்னணி பாடகியான இவரை பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இவரின் பாடல்கள் எல்லாம் புகழ்பெற்ற பாடல்கள் ஆகும்.

தேவா, ரஹ்மான் போன்றவர்களின் இசையில் அதிகம் பாடல்கள் பாடியுள்ளார் இவர். இளையராஜாவின் இசையில் பழசி ராஜா படத்திலும் பாடல்கள் பாடியுள்ளார் இவர்.

வித்யாசாகரின் சினேகிதியே, தேவா இசையமைத்த மதுமதி, ரஹ்மான் இசையில் மிஸ்டர் ரோமியோ படத்தில் வரும் தண்ணீரை காதலிக்க மீன்களா இல்லை போன்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்.

இவர்தான் பாடகி சங்கீதா சஜித். தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 200 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.

சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று இவர் மரணமடைந்தார்.