கர்நாடகாவை சேர்ந்தவர் சேத்தனா ராஜ். இவர் பிரபலமான கன்னட சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார். பொதுவாக நடிகைகள் அனைவரும் தன்னை அழகாக்கி கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட விசயங்களை செய்து வருகின்றனர்.
இதில் உள்ள ஆபத்து மற்றும் பக்க விளைவுகளை இவர்கள் உணர்வதில்லை. நடிகை சேத்தனாராஜும் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறேன் என பெங்களூருவில் உள்ள காஸ்மெடிக்ஸ் சென்டரில் சேர்ந்திருக்கிறார்.
சேத்தனாராஜின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் அந்த காஸ்மெடிக் சென் டர் நிறுவனம் சிகிச்சையை ஆரம்பித்ததில் சேத்தனா ராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் பதறிப்போன நிர்வாகம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேத்தனாராஜை அனுமதித்தது. இருப்பினும் சேத்தனா ராஜ் உயிரிழந்தார் இதனால் சேத்தனா ராஜின் பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்துள்ளனர்.