cinema news
பிச்சைக்காரன் 2 போஸ்டருக்கு எதிர்ப்பு
விஜய் ஆண்டனி தயாரிப்பில் நடிப்பில் இயக்கத்தில் பிச்சைக்காரன் 2 படம் உருவாகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி இயக்குனராக முதல் முறையாக அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அறிமுக போஸ்டரில் காளி படம் இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் பிச்சைக்காரன் என போடப்பட்டுள்ளது இது இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது என மதுரையை சேர்ந்த இந்து கட்சி பிரமுகர் சோலைக்கண்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.