Connect with us

தேவையில்லாத இடையூறு செய்யப்படுகிறது- பிச்சை குருக்கள் வேதனை

Latest News

தேவையில்லாத இடையூறு செய்யப்படுகிறது- பிச்சை குருக்கள் வேதனை

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலின் அர்ச்சகர் பிச்சை குருக்கள். மிக மூத்த சிவாச்சாரியாரான இவர் பல்வேறு பெரிய கோவில்களில் கும்பாபிசேக பணிகளை முன் நின்று செய்துள்ளார். தென் மாவட்டங்களில் இவரை தெரியாதவர்கள் கிடையாது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம்  பிள்ளையார்பட்டி சிவநெறிக் கழக வேத பாடசாலையில் தங்களது இன்னல்களை போக்கவும், நினைத்த காரியம் கைகூடவும் கற்பக விநாயகரிடம் அதர்ம சீரிச மந்திர பாராயணம் பாடி80-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பிரார்த்தனை செய்தனர்.

அப்போது பேசிய பிச்சை குருக்கள்

பரம்பரை, பரம்பரையாக பலநூற்றாண்டு காலமாக சிவாச்சாரியார்கள் சிவாலயங்களில் பூஜைசெய்து வருகின்றனர். நாங்கள்யார் மீதும் வெறுப்பு காட்டியதும் இல்லை. யார் மனதையும் புண்படும் அளவுக்கு பேசியதும் இல்லை. வறுமையில் வாழ்ந்தாலும், வளமாக இருந்தாலும் இறைவன் மீது பற்று நீங்காதவர்களாக உள்ளோம்.

சிவாலய பூஜைகளில் பல நூற்றாண்டுகளாக ஆதிசைவர்கள் தவிர மற்றவர்கள் ஈடுபட்டது கிடையாது. மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் தேவையற்ற இடையூறு, குழப்பம் உண்டாக்குவதுமன வேதனையைத் தருகிறது. நாங்கள் யாருக்கும் விரோதிகள் அல்ல, மற்ற மதங்களோடு வம்பு செய்வதும் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இதுபற்றி அதிகம் தான் பேச விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...

More in Latest News

To Top